ஊரடங்குக்கு பிறகு டிவிஎஸ் நிறுவனம் உற்பத்தியைத் தொடங்கியது

--

சூர்

புகழ்பெற்ற இரண்டு மற்றும் மூன்று சக்கர நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஓசூர், மைசூர் மற்றும் நளாகர் ஆகிய இடங்களில் உற்பத்தியைத் தொடங்கி உள்ளது.

இந்தியாவில் புகழ்பெற்ற டிவிஎஸ் குழுமத்தின் கீழ் இயங்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இரண்டு மற்றும் மூன்று சக்கர நிறுவனங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஆகும்.  சுமார் 100 வருடங்களாக இயங்கி வரும் இந்த நிறுவனத்தின் தொழிலகங்கள் ஓசூர், மைசூர் மற்றும் நளாகர் உள்ளிட்ட பல இடங்களில் உள்ளன.

தற்போதுள்ள ஊரடங்கு காரணமாக இந்த தொழிலகங்கள் மூடப்பட்டிருந்தன.  டிவிஎஸ் மோட்டார் நிறுவன நிர்வாகம் இன்று முதல் ஓசூர், மைசூர், மற்றும் நளாகர் ஆகிய தொழிலகங்களில் உற்பத்தியைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.   இந்த தொழிலகங்களில் பணி புரியும் ஊழியர்களின் முழு பாதுகாப்புக்கு உறுதி அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் நிறுவனம் கொரோனா வைரஸ் பரவுவதைக் குறைக்கும் வகையிலும் ஊழியர்கள் வைரஸால் பாதிப்பு அடையாமல் இருக்கத் தேவையான வகையிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக உறுதி அளித்துள்ளது.  அத்துடன் அதிக அளவில் சுகாதாரத்துடனும் ஊழியர்களுக்கிடையே போதிய சமூக இடைவெளி இருக்கும் வகையிலும் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அது மட்டுமின்றி டிவிஎஸ் நிர்வாகம் ஒரு சிலர் அவர்களின் பணிகளுக்கு ஏற்ப வீட்டிலிருந்து பணி புரிய அனுமதித்துள்ளது.