‘ட்வைலைட்’ நடிகர் க்ரிகோரி டைரீ பாய்ஸ் காதலியுடன் மர்ம மரணம்….!

‘ட்வைலைட்’ படங்களில் டைலர் க்ரௌலி என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமானவர் க்ரிகோரி டைரீ பாய்ஸ் (30). இவர் லாஸ் வேகஸ் நகரில் இருக்கும் தனது வீட்டில் தனது காதலியுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டைரீயின் சகோதரர் அளித்த தகவலின் பேரில் போலீஸார் இருவரது உடலையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேதப் பரிசோதனையில் டைரீ மற்றும் அவரது காதலி இருவரும் கடந்த 13 ஆம் தேதியே இறந்துவிட்டார்கள் என்றும், இருவரது மரணத்துக்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.