64 வயதில் இரட்டை குழந்தை பெற்றெடுத்த ‘பேரிளம்பெண்’!

ஸ்பெயின்,

ஸ்பெயின் நாட்டில் 64 வயதுடைய மூதாட்டி ஒருவர், இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.

ஸ்பெயினின்ப ர்கோஸ் (BURGOS) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இந்த பேரிளம் பெண் இரட்டை குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.  அறுவை சிகிச்சை மூலமே இந்த இரட்டை குழந்தை பிறந்ததுள்ளது.

இரட்டையர்களில் ஒரு குழந்தை  ஆண் குழந்தை. மற்றொன்று பெண் குழந்தை.

அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறித்த வீடியோ ஒன்றை மருத்துவமனை வெளியிட்டுள்ளது.

அதில்,  64 வயதான அந்த மூதாட்டி குழந்தைப் பேறு சிகிச்சையை அமெரிக்காவில் மேற்கொண்ட தாகவும், பின்னர் குழந்தை பிரசவிக்க ஸ்பெயின் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த இரட்டை குழந்தை கடந்த மாதம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட காதலர் தினத்தன்று, காதலர் தின பரிசாக இரட்டை குழந்தை பிறந்தது என்றும், தற்போதுதான் தகவல்கள் வெளியாகி உள்ளது என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.