டில்லி,

ரட்டை இலை லஞ்சம் விவகாரத்தில் குரல் மாதிரியை தர எதிர்ப்பு தெரிவித்து டிடிவி தினகரன் டில்லி உயர்நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் டில்லி குற்றப்பிரிவு போலீசார் குரல் மாதிரி கேட்பது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக உடைந்ததால் இரட்டை இலை முடக்கப்பட்டது. அதையடுத்து, இரட்டை இலையை தங்களது அணிக்கே ஒதுக்க வேண்டும் என்று டிடிவி தரப்பு, தேர்தல் அலுவலக ஊழியர்களுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்தது.

இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்தர் என்ற புரோக்கர் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து டிடிவி தினகரனும் கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது, டிடிவி தினகரன் புரோக்கர்களுடன் தொலை பேசி மூலம் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டது.

தற்போது ஜாமினில் இருக்கும் டிடிவி தினகரனின்  குரல் மாதிரியை ஆய்வு செய்ய வேண்டும் என்று டில்லி போலீசார் கூறியிருந்தனர்.

அதைத்தொடர்ந்து, டிடிவி தினகரன் தரப்பில், டில்லி ஐகோர்ட்டில், டில்லி குற்றப்பிரிவு போலீசார் குரல் மாதிரி கேட்பது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று குறிப்பிட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை அடுத்தாண்டு மார்ச் மாதம் 19-ம் தேதி விசாரிக்கப்படும் டில்லி ஐகோர்ட்டு கூறி உள்ளது.