டில்லி:

ரட்டை இலையை பெற டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திராவின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜெ.மரணத்தை தொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்தது. அதைத்தொடர்ந்து கடந்த வரும் ஏப்ரல் மாதம்  நடைபெற இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரு தரப்பினரும்  இரட்டை இலையை கேட்டதால், அதை முடக்கியது தேர்தல் ஆணையம்.

இந்நிலையில், இரட்டை இலையை தங்களது அணிக்கு ஒதுக்க, டிடிவி தினகரன்  தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, தரகர் சுகேஷ் சந்திரா என்பவர் கைது செய்யப்பட்டார்.  அவரிடம் இருந்து ரூ.1.30 கோடி கைப்பற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

பின்னர் அவரது வாக்குமூலத்தை தொடர்ந்து டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். தற்போது டிடிவி தினகரன் ஜாமினில் உள்ளார்.

இதற்கிடையில், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பல முறை  மனு தாக்கல் செய்தும் தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் கடந்த வாரம் புதிய மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுமீதான ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, சுகேஷின் வழக்கறிஞர் ஆஜராகி, இவ்வழக்கில் விசாரணை முடிவடைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஆனார்,  இதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பு 12ந்தேதி (இன்று) வழங்கப்படும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் சுகேஷ் சந்திராவின் ஜாமின் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தத. அப்போது, சுசேஷின் ஜாமின் வழங்க மறுத்து, அவரது  மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதி  உத்தரவிட்டார்.