இரட்டை இலை பெற லஞ்சம்: வழக்கை சிறப்பு அமர்வுக்கு மாற்றி உத்தரவு
டில்லி:
இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஜெ. மறைவை தொடர்ந்து அதிமுக உடைந்ததால், முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை சிறப்பு அமர்வுக்கு மாற்றி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிபதி அருண் பரத்வாஜ் இனிமேல் இரட்டை இலை வழக்கை கையாளுவார் என்று கூறப்படுகிறது.
ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக உடைந்தது. அதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் உடைந்த அதிமுகவின் இரு தரப்பினரும் இரட்டை இலை சின்னம் கோரியதால், அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலையை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது.
அப்போது இரட்டை இலை சின்னத்தை தனது அணிக்கு (அதிமுக அம்மா – சசிகலா அணி) ஒதுக்க இடைத்தர கர்கள் மூலம் தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி மீது டில்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணை நீடித்து வருகிறது.
இந்த வழக்கை தற்போது வேறு அமர்வுக்கு மாற்றி டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.