இரட்டை இலைக்கு லஞ்சம்: டிடிவி மீதான வழக்கு ஆக.30ந்தேதிக்கு ஒத்தி வைப்பு

--

டில்லி:

ரட்டை இலை சின்னம் பெற தேர்தல் கமிஷன் அலுவலர்களுக்கு  டி.டி.வி. தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை  ஆகஸ்ட் மாதம் 30ம் தேதிக்கு டில்லி நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

ஜெ.மரணத்தை தொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்தது. அதைத்தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுன் தேர்தல் சின்னமான இரட்டை இலையை இரு தரப்பினரும் கேட்டதால், இரட்டை இலையை முடக்கியது தேர்தல் ஆணையம்.

இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை தங்களது அணிக்கு ஒதுக்க, டிடிவி தினகரன்  தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்பட்டது. இது தொடர்பாக புரோக்கர் தரகர் சுகேஷ் சந்திரா என்பவர் கைது செய்யப்பட்டார்.  அவரிடம் இருந்து ரூ.1.30 கோடி கைப்பற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.

இந்த வழக்கில், டிடிவி தினகரன் மற்றும் அவரது பெங்களூர் நண்பர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். டிடிவி தினகரன் தற்போது வரை ஜாமினில் உள்ளார்.

இந்த வழக்கு பலமுறை விசாணைக்கு வந்தும், டிடிவி தரப்பில் இருந்து  வெவ்வேறு காரணங்கள்  கூறப்பட்டு தள்ளி வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இரட்டை இலை வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை ஆகஸ்டு 30ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.