இரட்டைஇலை லஞ்சம்: டி.டி.வி.தினகரனின் காவல் மேலும் 15நாள் நீடிப்பு!

டில்லி,

ரட்டைஇலை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி டில்லி திகார் சிறையில் இருக்கும் டிடிவி தினகரனின் காவல் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த மாதம் முழுவதும் அவர் சிறையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்தது. அதைத்தொடர்ந்து தேர்தல் கமிஷன் இரட்டை இலையை முடக்கியது. அதை தங்களது அணிக்கு ஒதுக்க கோரி, தேர்தல் கமிஷன் அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க  கூறப்பட்ட புகார் காரணமாக, டில்லி குற்றப்பிரிவு போலீசா ரால்  அதிமுகவின் சசிகலா அணி தலைவரான டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் திகார் சிறையில் இருக்கும் டிடிவி தினகரனின் காவல் மேலும் 15 நாட்கள் நீடித்து டில்லி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இதன் அடுத்தக்கட்ட விசாரணை வரும் 29ந்தேதி நடைபெறும் என்றும் கோர்ட்டு கூறியுள்ளது.