இரட்டை இலை வழக்கு: 2019ம் ஆண்டு ஜன.29க்கு ஒத்திவைப்பு

டில்லி:

டிடிவி தினரகன், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணை யத்துக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கின் அடுத்த விசாரணை ஜன.29க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த 4ந்தேதி நடைபெற்றபோது டிடிவி தினகரன் ஆஜராகி குற்றப்பத்திரிகை பெற்றுக்கொண்டார். பின்னர் வழக்கு 17ந்தேதிக்கு  ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்றைய விசாரணையை தொடர்ந்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஜனவரி மாதம் 29ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாக  பாட்டி யாலா நீதிமன்றம் அறிவித்து உள்ளது.

அதிமுக இரண்டாக உடைந்ததை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தால் முடக் கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை, தங்களது அணிக்கு பெற, புரோக்கர்கள் மூலம் தேர்தல் ஆணைய அலுவலர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் கொடுத்த வாக்குமூலத்தை தொடர்ந்து, டிடிவியும் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 4ந்தேதி விசாரணையின்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வழக்கு டிச.17க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது டிடிவி தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 29ந்தேதிக்கு ஒத்தி வைத்தப்பதாக பாட்டியாலா நீதிமன்றம் அறிவித்தது.

 

கார்ட்டூன் கேலரி