இரட்டைஇலை வழக்கு: டிடிவி தினகரன் ஜாமின் ஜூன்12ந்தேதிக்கு ஒத்திவைப்பு!

டில்லி,

ரட்டை இலை லஞ்சம் தொடர்பான வழக்கில் டிடிவி தினகரனின் ஜாமின் மனு ஜூன் 12ந்தேதி வரை நீட்டித்து  டில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின்போது, வழக்கின் விசாரணை அதிகாரி ஆஜராகாத தால் 29ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று டிடிவி தினகரன்மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையை ஜூன் 12ந்தேதிக்கு தள்ளி வைத்து டில்லி  தீஸ்ஹசாரி  நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

இவருடன் கைதான தரகர் சுகேஷ்சந்திரா, டிடிவி தினகரன் நண்பர் மல்லிகார்ஜூன் ஆகியோர் காவலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது..