டில்லி:

திமுக உடைந்ததை தொடர்ந்து இரட்டை இலையை தேர்தல் கமிஷன் முடக்கியது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் மேலும் கூடுதல் ஆவனங்கள் தாக்கல் செய்ய தேர்தல் கமிஷனிடம் இரு அணிகளும் அவகாசம் கேட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் 8 வார கால அவகாசம் வழங்கியுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான  ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில், இரு அணியினரும், இரட்டை இலை சின்னம் கேட்டதால், அந்த சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியது.

தற்போது,  இரட்டை இலை விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய இரு அணியினரும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்று கொண்டு ஜூன் 16 வரை 8 வாரம் கூடுதல் அவகாசத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.