இரட்டைஇலை சின்னம்: டில்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதி மன்றத்தில் நாளை விசாரணை

சென்னை:

ரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் கமிஷன், இபிஎஸ், ஓபிஎஸ் அணிக்கு ஒதுக்கியது சரிதான் என்று  டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து டிடிவி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு  வழக்கு கடந்த 5ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், “தேர்தல் ஆணையம் அரசியல் மாற்றத்தை அடிப்படையாக கொண்டு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் முழுமையாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

டிடிவி மேல்முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமை யிலான அமர்வில் நாளை விசாரணை வருகிறது. அந்த வழக்குடன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு  குக்கர் சின்னத்தை  ஒதுக்க வேண்டுமென தொடர்ந்த மனுவும் இந்த வழக்குடன் சேர்த்து நாளை விசாரிக்கப்படவிருக்கிறது.

கார்ட்டூன் கேலரி