டில்லி,

திமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்தை ஒருங்கிணைந்த அதிமுக வுக்கு (இபிஎஸ்-ஓபிஎஸ் அணி) ஒதுக்கி அகில இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது.

இதற்கு டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில்,   டில்லி உயர் நீதி மன்றத்தில் டிடிவி தினகரன் சார்பாக மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில்,  தேர்தல் ஆணையத்தின் முடிவு ஒருதலைப்பட்சமானது எனவும், ஆவனங்களை சரியாக விசாரணை செய்யாமல் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி உள்ளது.  நாங்கள் எடுத்து வைத்த பல வாதங்களை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவில்லை. எனவே, தேர்தல் ஆணை யத்தின் உத்தரவை ரத்து செய்து, தங்கள் தரப்புக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட  ஆர்.கே. நகர் இடைத் தேர்தலின் போது இரட்டை இலைச் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம், பல மாத விசாரணைக்குப் பிறகு தமிழகத்தில் ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு  சின்னத்தையும் பெயரையும் ஒதுக்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.