கேரளாவில் ’’இரட்டை இலை’’ சின்னம் மீண்டும் முடக்கம்..

கேரள மாநிலத்தில் கேரள காங்கிரஸ் ( கே,மானி ) தலைவராக இருந்து வந்த கே.மானி கடந்த ஆண்டு மரணம் அடைந்தார். இதனை தொடர்ந்து அந்த கட்சி பிளவுபட்டது.

கட்சியின் துணை தலைவர் ஜோஸ் கே.மானி தலைமையில் ஒரு பிரிவும், செயல் தலைவர் பி.ஜே.ஜோசப் தலைமையில் இன்னொரு பிரிவும் தனித்தனியாக செயல்பட்டு வந்தது.
கட்சி பெயருக்கும் , தேர்தல் சின்னமான இரட்டை இலைக்கும் உரிமை கோரி இரு பிரிவுகளும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டன.

இதனை விசாரித்த தேர்தல் ஆணையம் ஜோஸ் மானி தலைமையிலான கட்சியை அங்கீகரித்து கடந்த மாதம் தீர்ப்பு அளித்தது., அவருக்கே இரட்டை இலை சின்னத்தையும் ஒதுக்கி உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து பி.ஜே.ஜோசப் , கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் , தேர்தல் ஆணைய உத்தரவுக்கு ஒரு மாதம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்த ஆணையால் கட்சி பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் ஜோஸ் கே.மானி ஒரு மாதம் பயன்படுத்த முடியாது.

பா.பாரதி.