சென்னையில் டிடிவியிடம் இன்று 2வது நாளாக விசாரணை!

சென்னை:

ரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரனிடம் இன்று 2வது நாளாக சென்னையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள  தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த டில்லி கோர்ட் அனுமதி வழங்கியது.

அதைத்தொடர்ந்து  தினகரன் மற்றும் அவரது நண்பரை விசாரணைக்காக டில்லி போலீசார் சென்னை அழைத்து வந்தனர் .

நேற்று மதியம் சென்னை அழைத்து வரப்பட்ட டிடிவி தினகரன் பெசன்ட் நகரில் உள்ள ராஜாஜி பவனில் தங்க வைக்கப்பட்டார். அவரிடம் டில்லி போலீசார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து அவரது வீடு மற்றும் அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று அவரது மனைவி மற்றும் அவரது வீட்டு வேலையாட்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

டில்லி போலீசாரின் மற்றொரு பிரிவு தினகரன்  நண்பர் மல்லிகார்ஜூனாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து, தினகரனின் நண்பரின் அண்ணாநகர் வீட்டிலும் விசாரணை நடைபெறும் என தெரிகிறது