இரட்டை இலை வழக்கு: டிடிவி தினகரன் ஜாமின் மனு மீண்டும் ஒத்திவைப்பு!

டில்லி,

ரட்டை இலை லஞ்சம் தொடர்பான அனைத்து வழக்குகளும்  வரும் 29ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்  டில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றம் கூறியுள்ளது.

அதையடுத்து டிடிவி தினகரன் ஜாமின் மனுவும் மே 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

அவரது ஜாமின் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும் இதே வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் டிடிவி தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனாவின் மனுவும் விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து, அனைத்து  ஜாமின் மனு மீதான விசாரணைகளும்  மே 29ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

இன்றைய விசாரணையின்போது கோர்ட்டில், டில்லி போலீஸ் விசாரணை அதிகாரி ஆஜராகாத தால்  ஜாமின் மனுவை தள்ளி வைப்பதாக  டில்லி  தீஸ் ஹசாரி  நீதிமன்றம் கூறியுள்ளது.