சான் பிரான்சிஸ்கோ

டிவிட்டர் நிறுவனம்  தங்கள் பயனாளிகள் உடனடியாக பாஸ்வேர்டை மாற்ற வேண்டும் என பரிந்துரை செய்து உள்ளது.

டிவிட்டரில் தற்போது சுமார் 33 கோடி பயனாளிகள் உள்ளனர்.  பல அரசியல் தலைவர்கள், நடிகர்கள், ஆர்வலர்கள் உட்பட  பலரும் தங்களது கருத்துக்களை தெரிவிக்க டிவிட்டரை பயன்படுத்தி வருகின்றனர்.   சமீபத்தில் இந்த வலை தளத்தில் ஏற்பட்ட ஒரு தொழில் நுட்பக் கோளாறினால்  பயனாளிகள் அனைவருடைய பாஸ்வேர்டுகளும் ஒரு தொழில்நுட்ப புலத்தில் சேமிக்கப்பட்டு விட்டது.

இதனால் அந்த நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கு அனத்து பாஸ்வேர்டுகளும் தெரிந்து விட்டன.

தற்போது டிவிட்டர் நிறுவனம் “தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு விட்டன.  அனைத்து பயனாளிகளும் தங்கள் பாஸ்வேர்டை உடனடியாக மாற்றும் படி பரிந்துரை செய்கிறோம்.   இது பாதுகாப்பு காரணங்களுக்காக பரிந்துரைக்கப் படுகிறது.  இது வரை எந்த பாதிப்பும் நிகழவில்லை.  எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க பாஸ்வேர்டை உடனடியாக மாற்றவும்” என தகவல் வெளியிட்டுள்ளது.