சான்ஃப்ரான்ஸிஸ்கோ

மெரிக்காவை சேர்ந்த ஒரு இணையதள பாதுகாப்பு நிறுவனம் விடுத்த எச்சரிக்கையின் படி பாலியல் உறவுக்கு அழைக்கும் 90000 அக்கவுண்டுகளை டிவிட்டர் நீக்கியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த இணையதள பாதுகாப்பு நிறுவனம், ஜீரோ ஃபாக்ஸ்.  ”சைரன்” எனப் பெயரிடப்பட்டுள்ள தவறான பிரசுரங்களை இது டிவிட்டரில் கண்டுபிடித்துள்ளது.  தாம் அறிந்தவரை இதுவே மிக அதிகமான தவறான பிரசுரங்களை கொண்டது என நிறுவனம் கூறுகிறது.  நிறுவனத்தின் எச்சரிக்கையே ஏற்ற டிவிட்டர், 90000 அக்கவுண்டுகளை கண்டறிந்து நீக்கியுள்ளது.

நீக்கப்பட்ட அக்கவுண்டுகளில் பெரும்பாலும் ஒரு பெண்ணின் கவர்ச்சியான படம் முகப்புப் படமாக இருக்கும்.   அக்கவுண்டும் பெண்கள் பெயரில் துவங்கப்பட்டிருக்கும்.  இவை நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ, தங்களின் ட்வீட் மூலம் மக்களை கவர்ந்திழுக்கும்.  அவைகளில் பாலுணர்வை தூண்டும் வாசகங்களும் படங்களும் பதிந்து, தப்பும் தவறுமான ஆங்கிலத்தில், ”என்னை சந்திக்க எண்ணினால் கீழே உள்ள சுட்டியை அழுத்தவும்” எனக் குறிப்பிட்டிருக்கும்.

சுட்டியை அழுத்தியவுடன் அது மற்றொரு லின்குக்கு செல்லும், பின் வேறொன்று, என பல லின்க்குகள் வந்த பின், கடைசியாக ஒரு சைட்டுக்கு செல்லும்.  அங்கு ஒரு போர்னோ சைட்டுக்கு சப்ஸ்கிரப் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் படுவார்கள்.  அந்த சைட்டுகளின் உரிமையாளர்களே இந்த டிவிட்டர் அக்கவுண்டுக்கும் உரிமையாளர்களாக இருப்பார்கள்.  வெப் காம் மூலம் பாலியல் உறவை நேரடியாக காட்டுவதாக உத்திரவாதத்துடன் இந்த வெப் சைட் இருக்கும்   அந்த வெப்சைட்டுகளில் அரை நிர்வாணப் பெண்களின் புகைப்படங்கள் இருக்கும்.

சைரன் என அழைக்கப்படும் இத்தகைய தவறான பிரசுரங்கள் இனியும் வராது என டிவிட்டரும், ஜீரோ ஃபாக்ஸ் நிறுவனமும் உறுதி அளிக்கின்றன.