லகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவிலும் ஊடுருவி மிரட்டி வருகிறது. இந்த நிலையில்,பிரபல சமூக வலைதளமான டிவிட்டர், தனது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தி உள்ளது.

சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் பரவி வருகிறது. அங்கு இதுவரை 105 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ள நிலையில், 6 பேர்  உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், சமூக வலைதள நிறுவனமான டிவிட்டர் நிர்வாகம், உலகம் முழுவதும் பணியாற்றி வரும் தனது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தி உள்ளது.

ஏற்கனவே தென்கொரியா, ஹாங்காங், ஜப்பான்  உள்பட பல நாடுகளில் இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும், வீட்டிலேயே இருந்தே பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தற்போது டிவிட்டர் நிர்வாகம் தனது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தி உள்ளது.