வன்முறையை தூண்டும் வகையில் பேசும் வீடியோ: ஸ்டீவ் பானன் டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம்

வாஷிங்டன்: ஸ்டீவ் பானன் கணக்கை டுவிட்டர் நிர்வாகம் நிரந்தரமாக முடக்கி வைத்துள்ளது.

அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் முன்னாள் தேர்தல் ஆலோசகராக இருந்தவர் தான் ஸ்டீவ் பானன். நிதி மோசடியில் சிக்கி கைதானார். டிரம்பின் பிரச்சாரத்தையும் இவர் தான் வடிவமைத்தார்.

அண்மையில் இவர் ஆன்லைனில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்தோணி பாசி மற்றும் எப்பிஐ இயக்குநர் கிறிஸ்டோபர் வேரே ஆகியோர் தலை துண்டிக்கப்பட வேண்டும்எ என்று அந்த வீடியோவில் அவர் கூறி இருந்தார். இதையடுத்து ஸ்டீப் பானன் டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிர்வாகம் நிரந்தரமாக முடக்கியது.

வன்முறையை ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளதாக டுவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. டுவிட்டர் பக்கத்தில் ஒரு கணக்கை நிரந்தரமாக முடக்குவது என்பது வலுவான நடவடிக்கை என்றும் கூறி உள்ளது.

வன்முறையை  தூண்டக்கூடாது என்ற எங்களின் கொள்கைக்கு எதிராக இந்த பேச்சு உள்ளதால் நீக்கிவிட்டோம் என்று யுடியூப் செய்தி தொடர்பாளர் அலெக்ஸ் ஜோசப் தெரிவித்து உள்ளார்.

அவரின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ பேஸ்புக் மற்றும் யுடியூபிலும் வெளியிடப்பட்டது. இந்த வீடியோக்கள் நீக்கப்படும் முன்பாக 20,00,00 தடவைகள் பார்க்கப்பட்டன.