ஸ்ரீநகர்

காஷ்மீரப் பெண்களைக் குறித்து தவறாக பதிவிட்டதால் காவல்துறையால் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளவரின் டிவிட்டர் கணக்கு நீக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர் ஆஷிஷ் கவுல் இவர் காஷ்மீரில் வசிக்கும் இஸ்லாமியர்களைப் பற்றியும் அவர்களின் குடும்பத்துப் பெண்கள் குறித்தும் டிவிட்டரில் பல ஆட்சேபகரமான பதிவுகள்  பதிந்துள்ளார்.   இது குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.   கோதி பாக் காவல்நிலையத்தில் அவர் மீது  காவல்துறையினர்  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

அவர் தனது டிவிட்டர் பதிவு ஒன்றில் “அந்த …. களை பொருளாதார ரீதியாக கொல்ல வேண்டும் அவர்கள் தங்கள் மகள்களையும், மனைவிகளையும், டில்லி, மும்பை சென்னை ஆகிய நகரங்களில் தங்கள் உணவுக்காக விற்பனை செய்ய வேண்டும்” என காஷ்மீரி இஸ்லாமியர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.    இது போல பல பதிவுகளில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் தகாத வார்த்தைகள் பதிந்துள்ளார்.

அவர் மீதுகாவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதை ஒட்டி அவருடைய டிவிட்டர் கணக்கை டிவிட்டர் நிர்வாகம் நீக்கி உள்ளது.   ஆயினும் அவருடைய பதிவுகளின் ஃபோட்டோ ஷாட்டுக்கள் இன்னும் பதியப்பட்டு வைரலாகி வருகிறது.