புதுடெல்லி:

நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்பக் குழு முன்பு ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்ஸே ஆஜராகமாட்டார் என்று தெரிகிறது.


தேர்தல் நடவடிக்கையை சமூக வலைதளங்கள் மூலம் சீர்குலைக்கும் முயற்சி நடந்தால்,கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்திருந்தது.

இந்நிலையில்,நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்பக் குழு முன்பு கடந்த 11-ம் தேதி ஆஜராக வந்த ட்விட்டர் இளம் அதிகாரிகளை சந்திக்க நாடாளுமன்றக் குழு மறுத்துவிட்டது.

நாடாளுமன்றக் குழுவின் தீர்மானத்தின்படி, ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்ஸே அல்லது முடிவு எடுக்கும் நிலையில் உள்ள அதிகாரிகள் பிப்ரவரி 25-ம் தேதி ஆஜராக வேண்டும் என நாடாளுமன்றக் குழு கேட்டுக் கொண்டது.

இந்நிலையில், அரசியல் விளம்பரங்களை வெளிப்படைத் தன்மையுடன் வெளியிடுவோம் என ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் நிறுவனங்கள் அரசிடம் உறுதியளித்தன.

சமூக வலைதளங்களின் தனிநபர் உரிமை குறித்து விவாதிக்க நாடாளுமன்றக் குழு ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில்,தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்ஸேவுக்குப் பதில், ட்விட்டர் துணை தலைவர் கோலின் க்ரோவெல் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.