‘மாஸ்க் அணிந்தால் எடிட் பட்டன்’… டிவிட்டர் கலாய்ப்பு…

யனர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி முகக்கவசம் (மாஸ்க்) அணிந்தால், டிவிட்டரில் எடிட் பட்டன் ஆப்ஷன்  தருகிறோம் என்று டிவிட்டர் அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்க அனைவரும் முகக் கவசம் அணிந்தால் தங்களது வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படும் என அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.

பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டிவிட்டர் வலைதளத்தில், பதிவிடப்படும் தகவல்களை எடிட் செய்யும் வசதி இல்லாமல் இருக்கிறது. அதனால், முகநூல் போல, இதிலும் எடிட் செய்யும் வசதி தேவைய என்று பயனர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  உலகம்  முழுவதும் இருந்து சுமார் 320 மில்லியனுக்கும் அதிகமான  டிவிட்டர் பயனர்கள் டிவீட்டரில் எடிட் ஆப்ஷன் தேவை என்று வலியுறுத்தி  உள்ளனர்.

இது தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டே டிவிட்டர் நிர்வாகம் விரைவில் எடிட் வசதி அறிமுகம் செய்யப்படும் என கூறியது. இதுதொடர்பாக டிவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜாக் டொர்சி, கடந்த ஆண்டு டெல்லி ஐஐடியில் நடந்த விழாவில் கலந்துகொண்டு பேசும்போது, டிவிட்களை எடிட் செய்யும் வசதியை வழங்குவது குறித்து பரீசீலனை செய்யப்படுவதாக தெரிவித்ததுடன், இந்த வசதியை பலர் வீணடித்து விடக்கூடாது, இதற்கான பல கட்டுப்பாடு களுடன்   எடிட்டிங் வசதி ஏற்படுத்தப்படும் என கூறினார். இதன் காரணமாக எடிட் வசதி விரைவில் கிடைக்கும் என பயனர்கள் எதிர்பார்த்துக்கொண்டே உள்ளனர். ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை.

இந்த நிலையில்,  கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும், பெரும்பாலோனோர் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ள நிலையில், அவர்கள் தங்களது நேரத்தை சமூக வலைதளங் களிலேயே செலவிட்டு வருகின்றனர்.  இதனால்,  பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

இதனால் டிவிட்டர் பக்கத்தில், edit option  இல்லாத காரணத்தால் அதில் பதிவிடும் தகவல்களில் எதிர்பாராத வகையில்,  பிழை ஏற்பட்டால். அந்த டிவிட்டையே டெலிட் செய்துவேண்டி நிலை உள்ளது. ஆகவே எடிட் ஆப்ஷன் தேவை என மீண்டும் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

இந்த நிலையில் டிவிட்டர் நிர்வாகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அனைவரும் முகக்கவசம் அணிந்தால் வழங்குவோம் edit option என்று அறிவித்து உள்ளது.

டிவிட்டர் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு காரணமாக, விரைவில் எடிட் பட்டன் ஆப்ஷன் வழங்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு பயனர்களிடையே எழுந்துள்ளது.

உலக நாடுகள்கொரோனா பரவலைத் தடுக்க கடுமையாக போராடி வரும் நிலையில், டிவிட்டரின் இந்த அறிவிப்பு பயனர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கார்ட்டூன் கேலரி