Random image

அமர்நாத் பக்தர்கள் 2 பேர் உயிரிழப்பு….பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

ஸ்ரீநகர்:

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகை பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் அமர்நாத் யாத்திரை நடக்கும்.

பல ஆயிரம் பக்தர்கள் இந்த புனித யாத்திரையில் கலந்தகொள்வார்கள். 60 நாட்கள் நீடிக்கும் இந்த ஆண்டிற்கான யாத்திரை கடந்த மாதம் 28-ம் தேதி முதல் தொடங்கியது.

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பாண்ட்லிக் பாண்டுராஜ் உள்பட 2 பேர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது