காங்கிரசில் இணைந்த மத்திய பிரதேச பாஜக தலைவர்கள்

ந்தூர்

த்திய பிரதேச மாநில பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் காங்கிரசில் இணைந்துள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாநிலம் எங்கும் பிரசாரப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று முன் தினம் இந்தூரில் நடந்த பேரணியில் கலந்துக் கொண்டார்

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் நரசிங்கபுரம் மாவட்டம் தெண்டுகேடா தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் சஞ்சய் சர்மா. மற்றொரு தொகுதியான பண்டார் தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கமலபத் ஆர்யா.

இவர்கள் இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர்.   இது குறித்து மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் தனது டிவிட்டரில் தகவல் பதிந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தை ஆளும் பாஜக இது போல தேர்தல் நேரத்தில் நடப்பது சகஜமான ஒன்று எனவும் அதைப் பற்றி கட்சி மேலிடம் கவலை அடையவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இவர்கள் இருவரும் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் இருந்து அதன் பிறகு பாஜகவுக்கு மாறி தற்போது மீண்டும் தாய்க்கட்சிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.