Random image

வண்ணாரப்பேட்டையில் 2 மாணவர்கள் காணவில்லை : மக்கள் அதிர்ச்சி

சென்னை

ழைய வண்ணரப்பேட்டையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்து இரு சிறுவர்கள் காணாமல் போய் உள்ளனர்.

வட சென்னை பகுதியில்  உள்ள பழைய வண்ணாரப்பேட்டையில் வசிப்பவர் தமிழ்வானன்,   இவருடைய மகனான காட்வின் என்பவருக்கு வயது 7 ஆகிறது.  காட்வின் அருகில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

நேற்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த காட்வினை திடீரென காணவில்லை.   பெற்றோரும் அக்கம்பக்கத்தினரும் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.  காட்வின் குறித்து பெற்றோர் வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதே பகுதியில் ஜெயந்தி என்பவர் வசித்து வருகிறார்.  இவருடைய மகன் சசிகுமாருக்கு வயது 9 ஆகிறது.   இவர் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டு இருக்கிறார்.   இவர் மற்றொரு பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது இவரும் காணாமல் போய் உள்ளார்.

வண்ணாரப் பேட்டை பகுதியில் ஒரே நாளில் இரு பள்ளி மாணவர்கள் அடுத்தடுத்து காணாமல் போனது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.