காவல்துறையினரின் கையாலாகாதனம்: பட்டாக்கத்திகளுடன் மோதிய கல்லூரி மாணவர்கள், ஒருவரின் உயிர் ஊசல்

சென்னை:

ட்டாக்கத்திகளுடன்  பட்டப்பகலில் இரு கல்லூரி மாணவர்களியே ஏற்பட்ட மோதலில், 7 பேர் காயம் பட்ட நிலையில், ஒரு மாணவரின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. காவல்துறையின ரின் கையாலாகாதனத்தால் இது போன்ற சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மிழகத்தின் தலைநகரான சென்னையில் சமீப காலமாக வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கல்லூரி மாணவர்களிடையே எழுந்துள்ள கத்திக் கலாச்சாரம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

காவல்துறையினரின் கையாலாகாதனம் காரணமாகவே இதுபோன்ற சம்பவங்கள், பட்டப்பகலில், பொதுமக்கள் முன்னிலையில் அரங்கேறி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

நேற்று பிற்பகல், சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும், மற்றொரு கல்லூரி மாணவர்களுக்கும் இடையே நடைபெற்ற  பயங்கர மோதலில் 7 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் ஒரு மாணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மாதம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் பஸ்டே கொண்டாட்டம் காரணமாக கடுமை யான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், தற்போது, அந்தக் கல்லூரி மாணவர்களின் அடாவடித்தனம் எல்லைமீறி சென்றுள்ளது.

இது குறித்து விசாரித்தபோது, மாணவர்களிடையே உள்ள ரூட் தல என்ற தலைமை பதவிக்கான மோதலில் இரு தரப்பினர் இடையே  சண்டை ஏற்பட்டதாகவும், அப்போது, பயணிகள் மற்றும் சக மாணவர்கள் முன்னிலையிலேயே, ஒரு தரப்பினர், மற்றொரு தரப்பினரை தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால்  சரமாரியாக தாக்கியதாக கூறப்படு கிறது. இதைப்பார்த்த சக பயணிகளும், மாணவர்களும் பஸ்சில் இருந்து இறங்கி அலறி அடித்து ஓடினர்.

இந்த  பயங்கர மோதலில் 7 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது. இதில்,  2ம் ஆண்டு மாணவர் வசந்த்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில்,  ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆயுதங்களுடன் தப்பியோடிய மாணவர்களை பிடிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், காவல்துறையினர், மாணவர்களின் அட்டூழியங்கள் குறித்து கண்டுகொள்ளாததாலேயே இதுபோன்ற  சம்பவங்கள் தொடர்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகினற்னர்.

கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை கையில் எடுத்துள்ள மாணவர்கள், படிப்பை தொடர அருகதை அற்றவர்கள் என்றும், அவர்களின் கல்லூரி படிப்பு மேலும்  தொடர முடியாதபடியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் பலர், மாணவர்களின்  கைகளில் இனிமேல், வாழ்நாளில் கத்தி போன்ற ஆயுதங்களை பிடிக்க முடியாத வகையில்  காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  பதிவிட்டு  வருகின்றனர்.

காவல்துறையினர் மாணவர்கள்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…

புதிய டிஜிபி இந்த விஷயத்தில், தகுந்த நடவடிக்கை எடுப்பாரா அல்லது பழைய டிஜிபி போல கண்டுகொள்ளாமல் இருப்பாரா?