ஒரே பெண்ணை காதலிக்க இரண்டு 10ம் வகுப்பு மாணவர்களிடையே மோதல்: ஒருவர் கொலை

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தல் ஒரே பெண்ணை காதலித்த இரண்டு 10ம் வகுப்பு மாணவர்களி டையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு மாணவர் கொல்லப்பட்டார்.

ஐதராபாத்தில் இருந்து சுமார் 190 கிமீ தூரத்தில் அமைந்துள்ன ஜக்டியால டவுன் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வரும்  16 வயது உள்ள 10ம் வகுப்பு படித்து வரும் மாணவர்களான ரவி தேஜா மற்றும் மகேந்தர் ஆகிய 2 பேரும், ஒரே பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படு கிறது.

இந்த மோதலில் மகேந்தர் கொல்லப்பட்ட நிலையில், ரவிதேஜா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விசாரணையில்  இருவர் மீதும் பெட்ரோல் ஊற்றப்பட்டிருப்பதாகவும், சண்டையிட்ட இரண்டு மாணவர்களும் மது அருந்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

ஆனால், கொல்லப்பட்ட மகேந்தர் குடும்பத்தினர் இந்த விவகாரத்தில் மேலும் ஒருவர் சம்பந்தப் பட்டிக்க வாய்ப்பு இருப்பதாக  காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்த காவல்துறையினர்,  இரண்டு மாணவர்களும் சண்டையிட்ட பகுதியில் பீர் பாட்டில்கள், மொபைல் போன்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணையில், அதே வகுப்பில் அவர்களுடன் படித்து வரும் ஒரு பெண்ணுக்காக இருவரும் சண்டையிட்டுள்ளது தெரிய வந்திருப்பதாகவும் கூறினர்.

மேலும், கைப்பற்றப்பட்ட மொபைல் போனில் உள்ள தகவல்கள் குறித்து ஆராய்ந்ததில், இருவரும் தங்களது உடலில் பெட்ரோல் ஊற்றியது தெரிய வருகிறது என்ற  என்ற காவல்துறையினர், இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து உறுதியாக கூறமுடியவில்லை என்றும் தெரிவித்து உள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.