பலகோடி மதிப்புள்ள மரகத லிங்கத்தை விற்க முயன்ற தி.மு.கவினர் இருவர் கைது!

 

தஞ்சாவூர்,

ரகத லிங்கத்தை கடத்திய திமுகவினர் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

நவரத்தினங்களில்ஒன்றானது மரகதம். தமிழகத்தில் பாரம்பரியம் மிக்க கோவில்களில் மரகத கல்லால் ஆன சிலைகள் காணப்படுகிறது.

இந்த மரகத கல்லுக்கு வெளிநாடுகளில் அதிக கிராக்கி. அதன் காரணமாக இந்த மரகத கற்களிலான சிலைகளை  திருடி வெளிநாடுகளுககு கடத்துவதில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சிலர் மரகதத்திலான லிங்கம் சிலையை விற்பனை செய்ய முயற்சி செய்வதாக  சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் கும்பகோணம்–மயிலாடுதுறை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்த  2 பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் மரகத லிங்கத்தை விற்பனை செய்ய முயற்சித்தது தெரிய வந்தது.

அதன் காரணமாக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் திமுக கட்சியை சேர்ந்தவர்கள்.

அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மரகத லிங்கத்தின் மதிப்பு கோடிகளை தாண்டும் என்றும் கூறப்படுகிறது.

இந்த மரகத லிங்கம் குறித்து, பொன்மானிக்கவேல் கூறியதாவது,

பறிமுதல் செய்யப்பட்ட மரகதலிங்கம் 130 ஆண்டுகள் பழமையானதாகும்.  இதை டில்லியை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர் தான் லிங்கத்தின் உண்மையான மதிப்பு தெரியவரும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.