பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்டு இந்தியா திரும்பிய விமானி அபிநந்தனின் பெயர் புதிதாக பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு சூட்டப்பட்டுள்ளது.

newborn_1482399762

கடந்த மாதம் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் மீது இந்திய விமானப்படை துல்லியத் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவிற்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானத்தை தடுக்க இந்திய விமானப்படை நடவடிக்கை எடுத்தது. அதன்படி பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய விமான ஒன்று கீழே விழுந்தது. அதன் விமானி வேறு வழியின்றி பாகிஸ்தான் எல்லையில் தரையிறங்கினார்.

இதையடுத்து விமானி அபிநந்தன் அந்நாட்டு ராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டார். தன்னை எதிரி நாட்டவர் சிறைப்பிடித்த போதும் சிறிதும் மனம் தள்ராத அபிநந்தன் மன உறுதியுடன் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து நமது நாட்டின் ரகசியங்களை காத்தார். அவரின் இந்த செயல் உலகளவிம் பேசப்பட்டது. தற்போது இந்தியவின் ரியல் ஹீரோவாக அபிநந்தன் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறார். அவரின் தேசப்பற்றையும், மன தைரியத்தையும் பாராட்டி இந்திய நாடு தலைவணங்கியது.

75 மணி நேரத்திற்கு பிறகு பாகிஸ்தான் பிடியில் இருந்து விடுவிக்கபப்ட்ட அபிநந்தனுக்கு டெல்லி மருத்துவமனையில் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவரை ராணுவத்தளபதி, பாதுகாப்புத்துறை அமைச்சர் உள்ளிட்டோர் பார்த்து நலம் விசாரித்தனர். இந்நிலையில் உத்திரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பிறந்த இரு குழந்தைகளுக்கு அபிநந்தன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

abhinandan

உத்திரபிரதேசத்தில் நிஹல்பூரை சேர்ந்தவர் 26 வயதான விம்லேஷ். நிறைமாத கர்ப்பிணியான விம்லேஷ் செய்திகளில் இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனைக் குறித்தும், விமானி அபிநந்தன் சிறைப்பிடிக்கபப்ட்டது குறித்தும் பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென கடந்த வியாழக்கிழமை பிரசவலி ஏற்பட்ட விம்லேஷ் ஜெய்ப்பூரில் உள்ள சிகித்சாலயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணியளவில் அந்த பெண்ணிற்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அதே நாள் அதே நேரத்தில் தான் இந்தியாவிடம் ஒப்படைக்க அபிநந்தன் வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டார்.

இதையடுத்து தனக்கு பிறந்த குழந்தைக்கு அபிந்தனின் பெயரை சூட்ட வேண்டுமென விம்லேஷ் அவரது கணவரிடம் கூறியுள்ளார். அதன்படி, விம்லேஷ் குழந்தைக்கு அபிநந்தன் என பெயர் சூட்டப்பட்டது. இது குறித்து பேசிய விம்லேஷ், “ தனக்கு குழந்தை பிறந்தால் அபிநந்தன் என பெயர் சூட்ட வேண்டும் என நினைத்தேன். ‘ அபிநந்தன் ‘ திரும்பி வந்ததையும், எனது மகன் பிறந்ததையும் என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன். உண்மையான அபிநந்தன் போல், எனது மகனும் நல்லப் பெயரை பெற்று தருவான் “ என கூறினார்.

இதேபோன்று கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணிக்கு நீலம் திக்கிவால் மற்றும் ரவி திக்கிவால் என்ற தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு அபிநந்தன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தனது குழந்தை பிறந்த அடுத்த நாள் விமானி அபிநந்தன் விடுவிக்கப்பட்ட செய்தி அறிந்ததும், ரவி திக்கிவால் தனது குழந்தைக்கு அபிநந்தன் பெயரை சுட்டியுள்ளார். விமானி அபிநந்தன் எப்படி நாட்டிற்கு பெருமை தேடித் தந்தாரோ அதேபோன்று, தனது மகனும் நடந்து கொள்ள ரவி திக்கிவால் விரும்பியுள்ளார். அதனால் தன் குழந்தைக்கு அபிநந்தன் என பெயர் வைத்ததாகவும், விமானி அபிநந்தனின் வீர வரலாற்றை கூறி தனது மகனை வளர்ப்பேன் என்றும் ரவி திக்குவால் கூறியுள்ளார்.