வெர்னியாவில் பிடிப்பட்ட இரட்டைத்தலை பாம்பு

விர்ஜினியா நாட்டில் இரட்டைத்தலை பாம்பு ஒன்று பிடிப்பட்டது. இரட்டை தலையுடன் ஊர்ந்து செல்லும் பாம்பை வனத்துறையினர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

snake

விர்ஜினியாவில் உள்ள உட்பிரிட்ஜ் (WoodBridge) குடியிருப்பு பகுதி ஒன்றில் இரட்டைத்தலையுடன் கூடிய பாம்பு ஒன்று கிடந்துள்ளது. இரட்டைத்தலையுடன் ஊர்ந்து சென்ற பாமபை பார்த்து அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள், இரட்டைத்தலை பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர், அதனை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

பாம்பையே பரவசமாக வேடிக்கை பார்க்கும் மக்கள், இரட்டைதலையுடன் கூடிய பாம்பு குறித்து தகவல் கிடைத்தவுடன் அதனை நேரில் பார்க்க படையெடுக்க ஆரம்பித்து விட்டனர். அந்த பாம்பின் தலை தாமிர நிறத்தில் உள்ளது. சாதரணமாக பாம்பு கொத்தினாலே நமது உடலில் உடனே விஷம் ஏறி, இரத்தம் உறைந்து விடும். இது இரட்டைத்தலை என்பதால், விஷத்தின் தன்மை வீரியமாக இருக்கும் என்று வனஉயிரி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.