ஆரம்பித்தது வெங்காய திருட்டு: புனேயில் 550 கிலோ வெங்காயம் திருடிய 2 பேர் கைது

புனே: புனேயில் வெங்காயம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாட்டில் இப்போது வெங்காயம் விலை தொடர்ந்து உயர்வில் இருக்கிறது. ஒரு கிலோ 100ஐ கடந்து விற்பனையாகி வருகிறது. வடமாநிலங்களில் பெய்யும் கனமழை காரணமாக  விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இந் நிலையில், புனேயில் வெங்காயம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். தேவ்ஜாலி கிராமத்தில் சஞ்சய் பராதி மற்றும் போபாட் காலே  ஆகியோர் 550 கிலோ எடையுள்ள வெங்காயத்தை திருடியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளனர்.

அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 379, 511 மற்றும் 34 பிரிவுகளின் கீழ் நாராயங்கான் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இப்பகுதிகளில் ஒரு வெங்காயம் 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.