ஐதராபாத்:

ரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்த பிரபல 2 பொறியியல் கல்லூரிகள் கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திருப்பி கொடுக்க தெலுங்கானா உயர்நீதி மன்றம் உத்தரவிட்டடது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களை  அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது நீண்டகாலமாக புகார் கூறப்பட்டு வருகிறது.  இதற்கடையில் நடப்பாண்டில், , மாநிலத்தில் அரசு  உதவி பெறாத தனியார் தொழில்முறை கல்லூரிகள் பல்வேறு படிப்புகளுக்கான கட்டண கட்டமைப்பில் 15 முதல் 20 சதவீதம் வரை உயர்த்தியது.

இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக தெலுங்கானா பெற்றோர் சங்கம் (டிபிஏ) சார்பில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது, பொறியியல் கல்லூரிகள் ,  சேர்க்கை மற்றும் கட்டண ஒழுங்குமுறைக் குழு (டிஏஎஃப்ஆர்சி) வகுத்துள்ள விதிகளை பின்பற்ற வேண்டும் என்று வாதிட்டது.  அப்போது உச்சநீதி மன்ற தீர்ப்பையும் சுட்டிக்காட்டினர்.

இதைத்தொடர்ந்து, மாணவர்களிடம் கூடுதலாக கட்டணம் வசூலித்த  சைதன்யா பாரதி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (சிபிஐடி) மற்றும் மகாத்மா காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஜிஐடி) கல்லூரிகள் கூடுதலாக வசூலித்த கட்டணத்தை மாணவர்களிடம் திருப்பி கொடுக்க தெலுங்கானா உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் விளைவாக சுமார் 2,000 மாணவர்கள் தாங்கள் செலுத்திய  கூடுதல் கட்டணத்தை திரும்ப பெறுவார்கள் என   எதிர்பார்க்கப்படுகிறது.

அங்கிருந்து வெளியாகும் ஊடகங்களின் தகவல்களின்படி, பொறியியல் படிப்புக்கு ஆண்டு  நிர்ணயிக்கப்பட்ட ரூ .1.13 லட்சத்திற்கு பதிலாக சைதன்யா கல்லலூரி  ரூ .2 லட்சம் வசூலித்ததாகவும்,  எம்ஜிஐடி கல்லூரி ஆண்டுக்கு ரூ .1.6 லட்சத்திற்கு பதிலாக கூடுதலாக ரூ .1 லட்சம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கூறிய தெலுங்கான பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், கட்டண உயர்வு குறித்து  கல்லூரிகளின் நிர்வாகங்களிடம் பலமுறை கூறியும் அவர்கள்  செவிசாய்க்க விரும்பவில்லை என்றும், ஏற்கனவே தங்களுக்கு முந்தைய நீதிமன்ற உத்தரவில் இருந்து  விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினர்.  இதனால் நாங்கள் நீதிமன்றத்தை அணுக வேண்டிய சூழல் ஏற்பட்டது என்றார்.

மேலும், கல்லூரிகளில்  மாணவர்கள் செலுத்திய கூடுதல் கட்டணத்தை நிர்வாகத்தினர் திருப்பிச் செலுத்துவார்கள் அல்லது 2020-21 கல்வியாண்டில் மாணவர்களின் கட்டணத்தை செலுத்துவதற்கான தொகையை சரிசெய்வார்கள் என்று நம்புவதாகவும் கூறினார்.