திருப்பதி ஏழுமலையானுக்கு அமெரிக்கா தொழிலதிபர்கள் ரூ.13.5 கோடி காணிக்கை

ஐதராபாத் :

அமெரிக்காவில் தொழில் புரியும் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த 2 பேர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ரூ.13.5 கோடி காணிக்கை அளித்தனர்.

இகா ரவி எனும் நபர் ரூ.10 கோடியை வெங்கடேஷ்வரா ஆன்லைன் உண்டியல் மூலமாக காணிக்கையாக அளித்தார். ஸ்ரீனிவாஸ் குட்டிகோண்டா என்பவர் ரூ.3.5 கோடிக்கான காசோலையை நேரில் அளித்தார் என்று திருப்பதி தேவஸ்தான மக்கள் தொடர்பு அதிகாரி ரவி தெரிவித்தார்.

திருப்பதியில் இயங்கும் மக்கள் நல அறக்கட்டளைகள், மருத்துவமனைகள் மற்றும் அனாதை ஆசிரமங்களுக்கு தாம் அளித்த காணிக்கை தொகையை பயன்படுத்தி செலவிட வேண்டும் என ஸ்ரீனிவாஸ் குட்டிகோண்டா தேவஸ்தான அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார். தேவஸ்தான தலைவர் புட்ட சுதாகர யாதவ், அமைச்சர் அமர்நாத ரெட்டி முன்னிலையில் இந்த காணிக்கை வழங்கப்பட்டது.

You may have missed