பாகிஸ்தான் ராணுவம் எல்லை மீறல் : இரு இந்திய வீரர்கள் சுட்டுக் கொலை

பூன்ச், ஜம்மு காஷ்மீர்

எல்லை தாண்டி வந்த பாக் ராணுவத்துடன் நடந்த சண்டையில் இரு இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

நேற்று இரவு பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சிலர் எல்லை தாண்டி ஊடுருவ முயற்சி செய்தனர்.   அப்போது காவலில் இருந்த இந்திய ராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.  பதிலுக்கு இந்திய ராணுவமும் சுட்டது.  இந்த சண்டையில் மகாராஷ்டிராவை சேர்ந்த சந்தீப் செர்ஜிராவ் யாதவ் (வயது 34), மற்றும் சாவன் பல்கு மானே (வயது 24) ஆகிய இரு வீரர்கள் மரணமடைந்தனர்.  பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் மரணமடைந்ததாகவும் ஒருவர் காயமுற்றதாகவும் தெரிகிறது.

இது போல் பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி வருவது சென்ற வருடத்தை விட இந்த வருடம் அதிகரித்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

 

கார்ட்டூன் கேலரி