சென்னை:

சென்னையில் 2 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலில், சென்னையில் தனியார் நாளிதழின் பத்திரிகையாளர் ஒருவருக்கும், எல்கட்ரானிக மீடியாவில் பணியாற்றும் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 1,323 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 103 பேர் குணமடைந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

மேலும், அந்த அறிக்கையில் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் 17, ஓமந்தூராரில் 30, ஸ்டான்லி மருத்துவமனையில் 5, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 13 பேர் என மொத்தம் நேற்று ஒரேநாளில் சென்னையில் மட்டும் 65 பேர் குணமடைந்துள்ளனர். இதனுடன் சேர்த்து தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 103 பேர் குணமடைந்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் இதுவரை 283 பேர் குணமடைந்து, வீட்டுக்கு சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை ஆலந்தூர் காவல்துறை குடியிருப்பில் வசிக்கும் எஸ்.ஐ. ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் எஸ்.ஐ.க்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் இன்று வெளியாகின.

இதுமட்டுமின்றி சென்னையில் 2 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.