கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் 2 பேருக்கு கொரோனா: இன்று நடைபெற இருந்த ஐபில் போட்டி ஒத்தி வைப்பு…

அகமதாபாத்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால்,  இன்று நடைபெற இருந்த ஐபில் போட்டி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்து உள்ளது.

ஐபிஎல் போட்டி முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.   இன்று கொல்கத்தா – ஆர்சிபி அணிகள் மோதவிருந்தன. இந்த நிலையில்,  கொல்கத்தா ஃநைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள இரண்டு கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து  இன்றைய ஐ.பி.எல். போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா ஃநைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த  இந்திய வீரர்களான வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர். இன்றைய போட்டிகாக தயாராகி கொண்டிருந்த கொல்கத்தா அணி வீரர்கள் பலருக்கு ஒருவரின் பின் ஒருவராக திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பயிற்சி ஆட்டங்கள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு வீரர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. அந்த பரிசோதனைகளின் முடிவில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்களுடன் தொடர்பில் இருந்த பேட் கம்மின்ஸ் மற்றும் பென் கட்டிங்ஸ் ஆகிய இரு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருக்கக்கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ளது. கொல்கத்தா அணி கடைசியாக கடந்த ஏப்.29ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதியது. அந்த போட்டியும் இதே அகமதாபாத் மைதானத்தில் தான் நடைபெற்றது. எனவே அடுத்தக்கட்ட நடவடிக்கையாக டெல்லி அணி வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சிஎஸ்கே அணியில் உள்ள  3 பேர் உள்பட கோட்லாவில் 5 மைதான வீரர்கள்  தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும்,   ஆனால்,  வீரர்கள் யாருக்கும் தொற்று பரவவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மற்றும் அகமதாபாத்தில் ஒரு உயிர் குமிழ் சூழலில் இரண்டு கே.கே.ஆர் வீரர்கள், சி.எஸ்.கே.வைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் (வீரர்கள் அல்ல) கோவிட் -19 க்கு சாதகமாக சோதனை செய்துள் ளனர். ஐ.பி.எல்-க்கு என்ன இருக்கிறது என்று இப்போது தெரியவில்லையா?