ரய்யா, உ.பி.

ன்று அதிகாலை உபி ஒரய்யா மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரியில் மற்றொரு லாரி மோதியதில் 24 பேர் உயிர் இழந்தனர்.

ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலையில் சிக்கித் துயருற்றனர்.  சொந்த ஊருக்குச் செல்ல சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் பலர் கிடைத்த வாகனங்களில் ஏறியும், நடந்தும் சென்று வருகின்றனர்.  அவ்வகையில் மகாராஷ்டிராவில் தண்டவாளத்தில்  நடந்து சென்ற  தொழிலாளர்கள் மீது ரயில் மோதி 16 பேர் உயிரிழந்தனர்.

இதைப் போல் லாரிகளில் சென்ற புலம்பெயர் தொழிலாளர்களும் விபத்துக்குள்ளாகும் நிகழ்வுகளும் தொடர்ந்து நடந்து வருகிறது.  ஆயினும் சொந்த ஊருக்குச் செல்ல வழியில்லாத ஏழைக் தொழிலாளர்கள் கிடைத்த போக்குவரத்து வசதிகளில் பயணம் செல்கின்றனர்.  அவ்வகையில் பீகார், ஜார்க்கண்ட் மேற்கு கங்கம் உள்ளிட்ட மாநிலத்தை சேர்ந்தவர்கள் ராஜஸ்தானில் இருந்து உபி வழியாகச் செல்லும் லாரியில் பயணம்  செய்துள்ளனர்.

இன்று அதிகாலை சுமார் 3.30 மணிக்கு ஓரய்யா மாவட்டத்திலுள்ள மிகாலி அருகே லாரி வந்துக் கொண்டிருந்தது.  அப்போது மற்றொரு லாரி இந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது.  விபத்தில் லாரியில் பயணம் செய்த தொழிலாளர்களில் 24 பேர் அதே இடத்தில் உயிர் இழந்துள்ளனர்.   சுமார் 15 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்ப்ட்டுள்னர்.