சென்னை அருகே மாவோயிஸ்டுகள் 2 பேர் கைது: பரபரப்பு

சென்னை,

சென்னை அருகே தேடப்பட்டு வந்த மாவோயிஸ்டுகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று இரவு திருவள்ளூர் அருகே நடைபெற்று வந்த சோதனையின்போது, இருசக்கரவாகனத்தில் ஆண், பெண் இருவரை போலீசார் மடக்கி விசாரணை செய்தபோது, அவர்கள் தப்பிய முயற்சி செய்தால், அவர்களை போலீசார் கைது செய்தனர்.

அவர்களை, திருவள்ளுர் அருகே உள்ள புள்ளம்பாக்கம் புள்ளரம்பாக்கம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், அவர்களின் பெயர்  தசரதன் மற்றும் செண்பகவல்லி என்பதும், அவர்கள் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்டுகள் என்பதும் தெரிய வந்தது.

சுமார் 10 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அவர்கள் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விசாரணை நடைற்று வருகிறது.

You may have missed