ஓடும் ரெயிலில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி : இரு ராணுவ வீரர்கள் கைது
எட்வா, உ.பி.
உத்திரப்பிரதேசத்தில் ஓடும் ரெயிலில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இரு ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அலகாபாத் நகரில் இருந்து டில்லி செல்வதற்காக மகத் விரைவு ரெயிலில் ஒரு பெண் பயணம் நேற்று பயணம் செய்துக் கொண்டிருந்தார். ஓய்வு பெற்ற நீதிபதியின் மகளான அவர் S8 பெட்டியில் தனியாக பயணம் செய்துக் கொண்டிருந்தார். அதே பெட்டியில் பாட்னாவை சேர்ந்த அமித்குமார் ராய் மற்றும் பிகாரை சேர்ந்த தபேஷ் குமார் ஆகிய இரு ராணுவ வீரர்களும் பயணம் செய்துள்ளனர்.
நடு இரவில் தனியாக இருந்த இந்தப் பெண்ணை இருவரும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். அந்தப் பெண் திமிரவே அவரை அடித்து உதைத்து கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர். அந்தப் பெண் பெரிதாக சத்தம் போடவே விழித்து எழுந்த சக பயணிகள் அவரை ராணுவத்தினரிடம் இருந்து காப்பாற்றி உள்ளனர்.
எட்வா ரெயில்வே காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். இரு ராணுவ வீரரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது பாலியல் பலாத்கார முயற்சி வழக்கு தொடர்ந்துள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.