இரு ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் கனடாவில் நுழைய தடை

ஒட்டாவா:

ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் குல்தர் சிங் சந்த்வான், அமர்ஜித் சிங் சண்டோ ஆகியோர் கனடா சென்றுள்ளனர்.

அப்போது, டொரோண்டோ விமான நிலையத்தில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். கனடா வந்ததற்கான காரணம் குறித்து சுங்கத் துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இருவரும் முறையாக பதில் கூறாததால் கனடாவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள் விமானம் மூலம் மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இதை கனடா ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் உறுதி படுத்தியுள்ளார். இதில் அமர்ஜித் சிங் மீது பாலியல் புகார் நிலுவையில் உள்ளது. அவர் திருப்பி அனுப்பப்பட்டதற்கு இது காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.