ஒடிடி தளத்தில் மேலும் இரண்டு பிரபலங்கள் படம் ரிலீஸ்..

ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்தபெண்குயின் ஆகிய படங்கள் ஏற்கெனவே ஒடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. அடுத்து யோகிபாபுவின் காக்டெய்ல் வருகிற ஜூலை 10-ந் தேதி வெளியாகிறது. மேலும் வரலட்சுமி சரத்குமாரின் டேனி படம் ஆகஸ்ட் 1-ந் தேதியும் நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் ஆகிறது இப்படங்களை தொடர்ந்து வெங்கட் பிரபு நடித்துள்ள ’லாக்கப்’படம் ஒடிடியில் நேரடியாக வெளியாகவிருக்கிறது.


இப்படத்தை நித்தின் சத்யா தயாரித்துள்ளார். வைபவ்,வாணி போஜன் ஜோடியாக நடித்துள் ளனர். பிரபல இயக்குனரர் வெங்கட்பிரபு முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார்.
இயக்குனர் மோகன்ராஜாவிடம் பணியாற்றிய எஸ்.ஜி. சார்லஸ் இயக்குகிறார். ஆரோல் கரோலி இசை அமைக்கிறார்.
லாக்கப் படம் ஜூலை மாதம் ஜீ5 ஒடிடியில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.