மேலும் இரண்டு  ‘’ கோயம்பேடுகள்’’

--

மேலும் இரண்டு  ‘’ கோயம்பேடுகள்’’

சென்னை மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு , கோயம்பேடு சந்தை மட்டுமே இப்போது, ஒரே  மொத்த காய்கறி சந்தையாக உள்ளது.

சென்னையிலும், சுற்றி உள்ள மாவட்டங்களிலும் கொரோனாவை பரப்ப விட்டதில் கோயம்பேடு  மார்க்கெட்டுக்கு  முக்கிய பங்கு உண்டு.

எனவே கோயம்பேடு சந்தைக்குப் பதிலாக,  மாற்று வழிகளை யோசித்து , சென்னை மாநகர மேம்பாட்டு  ஆணையம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

கோயம்பேடு சந்தை போன்று, சென்னையில் மேலும் இரண்டு சந்தைகளை  உருவாக்கப் போகிறது.

ஒன்று – கூடுவாஞ்சேரி பக்கமுள்ள நந்திவரத்தில் அமைய உள்ளது. அங்கு இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமான 16 ஏக்கர் நிலம் உள்ளது.

அதனை மிகப்பெரிய சந்தையாக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தென் சென்னை வாசிகளுக்கு இது உபயோகமாக இருக்கும்.

வட சென்னை வாசிகள் பயன் பெரும் வகையில், மாதவரத்தில், கோயம்பேடு சந்தைக்கு நிகரான சந்தையை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது,

– ஏழுமலை வெங்கடேசன்