பெண் செய்தியாளரை அவதூறு செய்ததாக நெட்டிசன்கள் இருவர் கைது

சென்னை:

பெண் பத்திரிகையாளரை அவதூறாக சமூகவலைதளங்களில் விமர்சித்ததாக விஜய் ரசிகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நியூஸ்மினிட் என்ற ஆங்கில இணையள இதழின் ஆசிரியர்  தன்யா ராஜேந்திரன்.  இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சமீபத்தில் வெளியான இந்தி படம் ஒன்றை விமர்சித்திருந்தார். அந்த படத்தோடு விஜய் நடித்த சுறா படத்தையும் பாதியிலேயே பார்க்க முடியாமல் எழுந்து வந்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள், தன்யா ராஜேந்திரனை சமூகவலைதளங்களில் அவதூறாக எழுதினர். இதையடுத்து நேற்று சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் தன்யா ராஜேந்திரன் புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர்  நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அவதூறாக எழுதிய நடிகர் விஜய் ரசிகர்கள் இருவர்  பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குபதிந்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Two Nettisans arrested for slandering female journalist, பெண் செய்தியாளரை அவதூறு செய்ததாக நெட்டிசன்கள் இருவர் கைது
-=-