கேரளத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 பேர் வீடு திரும்பினர்

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் 3 பேர் கொரோனான வைரஸ் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

சீனாவில் இருந்த இந்தியா திரும்பியவர்களில் கேரள மாநிலத்தைச்சேர்ந்த 3 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு நிலையில், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு  திரிச்சூர், ஆழப்புழா மற்றும் காசர்கோட் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இதில், முதலில்பாதிக்கப்பட்ட நபர் ஆழப்புழாவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் முழு குணமடைந்ததைத் தொடர்ந்து,  கடந்த வியாழக்கிழமை வீடு திரும்பினார். இந்த நிலையில், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த இரண்டாவது நபரும் தற்போது குணடைந்து வீடு திரும்பியுள்ளதாக கேரள சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மூத்த சுகாதாரத் துறை அலுவலர் ஒருவர் கூறும் போது,  “காசர்கோட்டைச் சேர்ந்தவரின் அடுத்தடுத்த இரண்டு ரத்த மாதிரிகள் மூலம் அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. அடுத்த 10 நாட்களுக்கு அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். தற்போது திரிச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியின் பரிசோதனை முடிவுக்காகக் காத்திருக்கிறோம். அவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பில்லை என்பது தெரியவந்தவுடன், அவர் வீடு திரும்புவதற்கான நடைமுறைகள் தொடங்கப்படும்” என்றார்.

இதனிடையே, கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா இன்று வெளியிட்ட அறிக்கையில்,

“பல்வேறு மாவட்டங்களில் 2,210 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 16 பேர் மருத்துவமனைகளில் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 2,194 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை சீனாவில் 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Corona virus, Kerala Health Department, Two of the Coronavirus affected patients discharged from hospital, கேரளத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 பேர் வீடு திரும்பினர், கொரோனா வைரஸ்
-=-