ண்டிகர்

வுதி அரேபியாவில் இரு பஞ்சாபியர்கள் தலை துண்டிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அரேபிய நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் இஸ்லாமிய சட்டப்படி தண்டனைகL அளிக்கப்பட்டு வருகின்றன. சிறு குற்றங்களுக்கும் அந்நாட்டில் கடுமையான தண்டனைகள் அளிப்பது வழக்கமாகும். அவ்வகையில் இந்தியாவில் இருந்து சென்ற இரு பஞ்சாபியர்களுக்கு தலை துண்டிப்பு மரண தண்டனை அளிக்கபட்டுளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சத்விந்தர் குமார் மற்றும் ஹர்ஜித் சிங் ஆகியோர் மற்றொரு இந்தியரான ஆரிஃப் இமாமுதின் என்பவருடன் தங்கி பணி புரிந்துள்ளனர். இம்மூவரும் அங்கு பல திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை நடத்தி உள்ளனர். ஒரு நாள் கொள்ளை அடித்த பணத்தை பங்கு பிரிப்பதில் அரிஃப் உடன் மற்றவர்களுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறில் ஆரிஃப் இமானுதினை மற்ற இருவரும் கொலை செய்து விட்டனர். இதை ஒட்டி இருவருக்கும் நீதிமன்றம் தலையை துண்டித்து மரண தண்டனை அளிக்க உத்தரவிட்டது. கடந்த ஆறாம் தேதி இருவர் தலையும் துண்டிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் சவுதியின் இந்த செய்கையை கடுமையாக கண்டித்டுள்ளார். இந்த தண்டனை மனிதத் தன்மை அற்றது எனவும் காட்டுமிராண்டி தனமானது எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இது குறித்து பஞ்சாப் அரசுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஒரு விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் அவர் கூறி உள்ளார்.