ஈராக் தலைநகரின் பாதுகாப்பு மிகுந்த பசுமை பகுதியில் ஈரான் ராக்கெட் தாக்குதல்! பாக்தாத்தில் பதற்றம்

பாக்தாத்:

ராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் வெளிநாட்டு தூதரகங்கள் அமைத்துள்ள  பாதுகாப்பு நிறைந்த பசுமைப் பகுதியில் ஈரான் 2 ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. இது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரான்  ஜெனரல் காசிம்  சுலைமானியை அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் சுட்டுக்கொன்றதைத் தொடர்ந்து, ஈரான், ஈராக்கில் முகாமிட்டுள்ள அமெரிக்கப் படைகள்மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ஏற்கனவே நேற்றுமுன்தினம் இரவு நடத்திய தாக்குதலில்  80 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் ஈரான் அறிவித்திருந்த நிலையில் நேற்று 2 ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க  தூதரகம் உள்ளிட்ட வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள அதிக பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டல பகுதி (Green zone) என்று அழைக்கப்படும் பகுதியில் இரண்டு முறை ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள் பார்த்ததாகவும்,  நள்ளிரவுக்கு சற்று முன்பு, பாக்தாத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும்,அப்போது பலத்த குண்டு வெடிப்புக்கான சந்தம் எழுந்ததாகவும், அதைத் தொடர்ந்து, பசுமை மண்டலத்தின் பாதுகாப்பு சைரன்கள் ஒலித்தன என்று தெரிவித்து உள்ளனர்.

ஏற்கனவே ஈரான், அமெரிக்க மற்றும் பிற கூட்டணிப் படைகளை வைத்திருக்கும் ஈராக் தளங்களில் தெஹ்ரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவிய 24 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.