மும்பை

காராஷ்டிர பாஜகவில் இரு மூத்த தலைவர்கள் கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தலில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி எனப் பெயர் பெற்ற போதிலும் பாஜக தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருகிறது.   முன்னாள்முதல்வ்ர் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராகப் பதவி ஏற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பெருமபான்மைய நிரூபிக்க இயலாத நிலை இருந்தது.  அதையொட்டி தேவேந்திர பட்நாவிஸ் நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமலே பதவி விலகினார்.

அடுத்து சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவி ஏற்று நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.   அவையில் போதுமான பெரும்பான்மை இல்லாததால் பாஜக வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.  அடுத்ததாகச் சபாநாயகர் தேர்தலில் தோல்வி பயத்தால் பாஜக வேட்பாளர் போட்டியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியின் நானா படோல் போட்டியின்றி சபாநாயகர் ஆனார்.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்களான பங்கஜா முண்டே மற்றும் எக்நாத் காட்சே ஆகியோர் கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறபடுகிறாது.   இருவருமே பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.  இருவருக்கும் அவர்கள் சமூகத்தில் நல்ல ஆதரவு உள்ளதாக சொல்லப்படுகிறது.   அவர்கள் ஆதரவாளர்கள் தங்கள் தலைவர்களுக்கு  பாஜக தலைமை அநியாயமாக நடந்து கொண்டதாக்க எண்ணி வருகின்றனர்.

குறிப்பாக பங்கஜா முண்டேவின் ஆதரவாளர்கள் அவர் முதல்வராக வருவார் என எதிர்பார்த்திருந்தனர்.   ஆனால் தேவேந்திர பட்நாவிஸ் அவர் எதிர்க்கட்சியுடன் நட்புடன் இருப்பதாகக்  கதை கட்டி அவரை தோற்க வைத்ததாக அவர்கள் எண்ணி வருகின்றனர்.   இவருடைய சகோதரரும் தேசிய வாத காங்கிரஸ் உறுப்பினருமான தனஞ்சய் முண்டேவை காரணம் காட்டி இவருக்கு எதிராக பட்நாவிஸ் காய் நகர்த்தி முதல்வரானதாகக் கூறப்படுகிறது.

எனவே தற்போது கிடைத்துள்ள தகவலின்படி பங்கஜா முண்டே மற்றும் எக்நாத் காட்சே இருவரும் எந்த நேரமும் கட்சியை விட்டு வெளியேறலாம் எனக் கூறப்படுகிறது.   இது குறித்து இருவருமே எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்க மறுத்துள்ளனர்.