டில்லி

ரு தினங்களில் இரண்டு இடங்களில் விமான வால் பகுதி மோதி விபத்துக்குள்ளானதில் யாரும் காயமின்றி தப்பினர்.

                                                            மாதிரி புகைப்படம்

கடந்த ஞாயிறு அன்று காலிகட் விமான நிலையத்துக்கு டாமன் விமான நிலையத்தில் இருந்து ஐ எக்ஸ் 382 விமானம் வந்துக் கொண்டிருந்தது. அதில் 190 பேர் பயணம் செய்துக் கொண்டிருந்தனர். அந்த விமானம் ரன்வேயில் இறங்கும் போது மிகவும் அதிர்ந்து குலுங்கியது.   இதனால் விமானத்தில் இருந்தோர் மிகவும் பயம் அடைந்துள்ளனர்.  மேலே ஏற்றி மீண்டும் விமானத்தை இறக்கிய போது பத்திரமாக இறங்கியது.

அதன் பிறகு விமானத்தை பரிசோதித்த விமான பொறியாளர்கள் விமானம் கீழிறங்கும் போது விமானத்தின் வால் பகுதி மோதியதால் இந்த அதிர்வு ஏற்பட்டது தெரிய வந்தது. இந்த நிகழ்வினால் விமானத்தில் இருந்தவர்கள் மற்றும் விமானத்துக்கு எவ்வித அபாயமும் உண்டாகவில்லை. விமானம் அடுத்த நாள் ஷார்ஜாவுக்கு பத்திரமாக பயணம் செய்துள்ளது.

அடுத்த நாள் அதாவது திங்கள் அன்று கோ ஏர் நிறுவனத்தின் விமானம் பெங்களூருவில் இருந்து ராஞ்சிக்கு சென்றது. அந்த விமானம் ராஞ்சியில் தரை இறங்கும் போது விமானத்தின் வால் பகுதி தரையில் மோதி உள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்த்வர்கள் யாருக்கும் எவ்வித காயமும் உண்டாகவில்லை. மேலும் சோதனைக்கு பிறகு மீண்டும் இந்த விமானம் பறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள்து.