காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் தாங்டர் எல்லைகோட்டுப் பகுதியில் ராணுவம்வழக்கம்போல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். þ

அப்போது வனப்பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து சிலர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றனர். இதை கண்டுபிடித்த இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை திரும்பிப் செல்லும்ம்படி எச்சரித்தனர்.

எச்சரிக்கையை பொருட்படுத்தாத பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டே முன்னேறினர். பாதுகாப்பு படை வீரர்கள் எதிர் தாக்குதல் நடத்தியதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை நீடித்து வருகிறது.